இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ?


அதிகாலை துயிலெழுந்து
பாட்டி கையால் எண்ணெய் முழுக்காட்டி,
கம்பெனி பெயர் வெளியேதெரிய
கவனமாய் தைக்கப்பட்ட
புதுத்துணி வாங்கியுடுத்தி,
அம்மா கையால் பட்சணந்தின்று
கையிலும் வெளியிலுமாய்
வெடித்துக் கொண்டாட
தீபாவளி சந்தோஷமிங்கில்லை

பொங்கலுக்குத் துணியெக்க
நல்லியில்லை; குமரன்னில்லை,
சாரதாசுங்கூட இல்லை.

நீந்தித்துளைத்து
நீராடிக்களிக்க
ஆடிப்பெருக்குக் காவிரியில்லை.

மடித்துக்கட்டின லுங்கியும் தலை
மறைத்துக்கடின முண்டாசுமாய்
நெஞ்சோடு அனைத்த கூடையிலிருந்து
உரமெடுத்து வீசித்தெளிக்க
பச்சை நெல்வயல்களிங்கு
சாஸ்வதமாகவில்லை.

வலைக்கையில் டீ க்ளாசும்
இடக்கையில் கிங் சைசும்
சுற்றிலும் நட்புவட்டமுமாய்
ஹோவென்று கூவி,
அரட்டையடித்துக் குலாவ,
தெருமுக்கில் நாயர்கடை இல்லை

பேரம்பேசி காய்கறிவாங்க
ரங்கநாதன் தெருவுமில்லை,
சுஜாதாவும், சுந்தர ராமசாமியும்
படிக்க ஒரு புத்தகக்கடையுமில்லை.

வேலைபார்க்கும் பட்டணத்தில்
வாங்கின சம்பளத்தோடு
வெள்ளி இரவு ஊர்சென்று
திங்களில் திரும்பிவர
அரசு போக்குவரத்தோ,
செங்கோட்டை பாஸஞ்சரோ,
சாத்தியமே இல்லை

'டே மச்சீ !' என விளித்து
சந்தேகம், உதவி கேட்க
ஆத்ம நட்பென்று யருமில்லை

சிகை கலைய பயனிக்கும்
படிக்கட்டுப் பயணமில்லை.
சைக்கிள் முதல் ஆட்டோ வரை
பெருமை சொல்ல
வகைக்கொன்றாய் வாகனமில்லை

கழுத்து சுற்றிய துப்பட்டா
பட்டத்து வாலாய் பின்னால் படபடக்க,
குழல் பறக்க ஸ்கூட்டியொட்டும்
கல்லூரிப் பெண்களெல்லாம்
கட்சிக்குக் கிடைக்கவில்லை

சிதைகாது,
பல்லுகுள் நொறுக்கது என்பெயரை
உச்சரிக்கும் பிரகிதி
ஒன்றுகூட இங்கைல்லை.

நலிந்து தளர்ந்த பெற்றோரை
நினைத்த பொழுதில்
சென்று பார்த்து வணங்கிவர,
தாவணிக்குள் நுழைந்த
செல்லத் தங்கையின்
சிகை கலைத்து வழ்த்துச்சொல்ல,
சொந்தங்களால் உற்சாகம்பெற
கொஞ்சமேனும் வழியே இல்லை.

இத்தனையும் இழந்து சேகரித்ததில்,
உரிலோர்வீடு மெய்ப்பட்டது,
வங்கிக் கையிருப்பு
மெல்ல மெல்ல உயர்கிறது.

மொத்தமாய் இழப்பென்றும்
சொல்லிவிடுவதற்கில்லை,
சனிக்கிழமை இரவுகளில்
ஊர்க்குத் தொலபேசி,
மனசுக்குள் முகமும், காதுக்குள் குரலுமாய்
மணிக்கணக்காய்ப் பேசமுடிகிற்தே !

எத்தனை சொல்லியென்ன,
என்போலே தவித்திருப்போர்
ஏராளம் உடனிருந்தும்,
எண்ணெயில் நீராய்,
ஒட்டாமல் தனிக்கிறேன்.
அலுத்துவிட்டதுதான்,
இந்த அயல்தேசத்து வாழ்க்கை !



-நன்றி எழுதியவர்க்கு(Unknown)-

<< கரும்பலகை  Contact blogger  Font Help