கன்னத்து முத்தமொன்று! [ Kannathu Muthamondru! ]

சுட்டும்விழிச் சுடர்தான்,- கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி,- கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்சத்தி ரங்களடீ!

சோலைமல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக்கட லலையே - உனது
நெஞ்சி லலைகளடீ!
கோலக்குயி லோசை - உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ,- கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.

சாத்திரம்பேசுகிறாய்,- கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ
ஆத்திரங் கொண்டவர்க்கே,- கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ?- பது பார்,
கன்னத்து முத்தமொன்று!



- நன்றி: மகாகவி சுப்பிரமணிய பாரதி -

<< கரும்பலகை  Contact blogger  Font Help